மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்!
ADDED :3839 days ago
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடந்தது. முன்னதாக, மீனாட்சியம்மன் கோவில் சுவாமி சன்னதியில் வேத விற்பன்னர்கள் யாகம் வளர்த்தனர். சிறப்பு வழிபாடுகள் நடந்தன. சரியாக இன்று பகல் 11.45 மணிக்கு சி்த்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்திரை திருவிழாவின் முதல் நாளான இன்று சுந்தரேஸ்வரர் கற்பக விருட்ச வாகனத்திலும், மீனாட்சி சிம்மவாகனத்திலும் பவனி வருகின்றனர். ஏப்.,30ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை, கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.