ஐந்து கருட சேவை
ADDED :3946 days ago
தூத்துக்குடி ஸ்ரீதேவி-பூதேவி சமேத வைகுண்டபதி பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை பெருவிழா மிகச்சிறப்பு. இவ்விழாவில் ரெங்கநாதபெருமாள், வரதராஜபெருமாள், வைகுண்டபதி பெருமாள் கல்யாண ஜகந்நாதர், திருப்பதி வெங்கடாசலபதி ஆகியார் ஐந்து கருட வாகனத்தில் வீதி உலா வருவர். கருடாழ்வாரை கருட தண்டகம், கருட கவசம் ஆகியவற்றைச் சொல்லி வணங்கினால் தீராத நோய்கள் தீரும். பாவங்கள் விலகும். தொழில் விருத்தியாகும். பகைவர்களின் தொல்லை நீங்கும். எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும் என்பர் பெரியோர்.