சிவசின்னங்களை அணியாதவர்களின் இழிவு
ADDED :3886 days ago
பூதியணி யார்வதனம் நீசர்சுடு காடதாம்
புரகரவுன் அக்க மணியைப்
புனையார்கள் மெய்ப்புலைத் தெருவெச்சில் உண்டுமெய்
புழுத்தி றந்திடு நாயுடல்
நாதிநின் பூசனைசெய் யாதகை ஈமத்தின்
நடுஅவிந் திடுஞெ கிழிகை
நற்கோயில் வலமுறாக் கால்கொலைக் களமதனில்
நாட்டமுட் கழும ரக்கால்
போதுசிவ தெரிசனம் உறாதவர்கண் விழுப்புணவை
பொங்குமெட் டித்த ருக்கள்
போதவுனை நினையாத நெஞ்சமே கற்பாறை
புகரண்ட வாள மலையாம்
தீதுபெறும் இவரைப் படைத்திட்ட நான்முகன்
செயலெ லாம்வீண் பாழதாம்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.