விழுப்புரம் சிவன் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
ADDED :3857 days ago
விழுப்புரம்: விழுப்புரம் பிரகன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையாட்டி, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு பிடாரி உற்சவம், விநாயகர் உற்சவம் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து, பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது. இரவு பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து 12 நாட்கள் நடக்கும் விழாவில், திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் உற்சவ ரிஷபவாகனம், சூரிய பிரபை, பல்லாக்கு, அதிகாரநந்தி சேவை, பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனம், யானை வாகனம், மாவடி சேவை, திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. பின்னர், மே 1ம் தேதி காலை திருத்தேர் உற்சவம் நடக்கிறது.