புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் கொடியேற்றம்
ADDED :3925 days ago
ராஜபாளையம் : புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றவிழா துவங்கியது. காலை 5.55 மணிக்கு கொடியேற்றப்பட்டு, கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தன. மே 2ல் பூக்குழி நடைபெற உள்ளது. விழா நாட்களில் பொட்டி பல்லக்கு, கண்ணாடி சப்பரம், பூத வாகனம், தண்டியல் கண்ணாடி சப்பரம், பூச்சப்பரம், தண்டியல் தட்டு சப்பரம் போன்றவற்றில் அம்மன் வீதி உலா நடைபெறும்.