உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்குன்றம் கோவில் நுழைவாயில் கும்பாபிஷேகம்!

செங்குன்றம் கோவில் நுழைவாயில் கும்பாபிஷேகம்!

செங்குன்றம்: செங்குன்றத்தில், அம்மன் கோவிலில் கருவறை அடிக்கல் நாட்டு விழா மற்றும் நுழைவாயில் கும்பாபிஷேகம் நடந்தது. சென்னை செங்குன்றம் பஜனை கோவில் தெருவில், பனையாத்தம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல் சிறப்பு யாகபூஜைகள் நடந்தன. நேற்று காலை, 7:30 மணி அளவில், கருவறை அடிக்கல் நாட்டப்பட்டது. அதையடுத்து, பஜனை கோவில் தெரு, ஜி.என்.டி., சாலை சந்திப்பில் அமைக்கப்பட்ட, பனையாத்தம்மன் கோவிலுக்கான நுழைவாயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !