உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளவனூரில் தேர்த் திருவிழா!

வளவனூரில் தேர்த் திருவிழா!

விழுப்புரம்:வளவனூர் சலத்துவாழி முத்துமாரியம்மன் கோவில், தேர் திருவிழா நடந்தது.விழுப்புரம் அடுத்த குமாரபுரி, வளவனூர், குடுமியாங்குப்பம் பகுதி மக்கள் சார்பில், சலத்துவாழி முத்துமாரியம்மன் கோவில் சித்திரைப் பெருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 15ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு, சக்தி கரகம் ஜோடித்து, ஊர்வலத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து அம்மன் இந்திர விமானம், சிங்க வாகனம், வேப்பங்கிளை வாகனம், நாகவாகனம், அன்னவாகனம், யானை வாகனம், ரிஷிப வாகனம், வெட்டுக்குதிரை வாகனம் ஆகியவற்றில் தினமும் வீதியுலா நடந்தது.நேற்று காலை 9:00 மணிக்கு, திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது.இதில் வளவனூர் பேரூராட்சி சேர்மன் முருகவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !