எதப்பட்டு கோவிலில்அக்னி வசந்த விழா!
ADDED :3788 days ago
அவலூர்பேட்டை: எதப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நடந்தது.மேல்மலையனூர் ஒன்றியம் எதப்பட்டு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா, கடந்த 3ம் தேதி துவங்கியது. விழாவை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.கோவில் வளாகத்தில் பிற்பகலில் தினசரி 21 நாட்கள் வரையில் மகாபாரத சொற்பொழிவும், இரவில் 10 நாள் நாடகமும் நடந்தது. தொடர்ந்து 22ம் தேதி காலை துரியோதனன் படுகளமும், மாலை தீமிதி திருவிழாவும் நடந்தது. இதில் திரளான கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர்.