உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூரில்பிரமோற்சவம் துவக்கம்மே 3ல் தேரோட்டம்!

திருக்கோஷ்டியூரில்பிரமோற்சவம் துவக்கம்மே 3ல் தேரோட்டம்!

திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் சித்திரைப் பிரமோற்சவம் துவங்கியது.மே 3ல் தேரோட்டம் நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு புட்டு மண் எடுத்து பூமி பூஜை சேனா முதல்வர் புறப்பாடு நடந்தது.நேற்று காலை 9.30 மணிக்கு பெருமாள் உபயநாச்சிமார் சகிதம் கல் மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து கருடர் படம் பொருத்திய கொடிப்படம், சக்கரத்தாழ்வார் திருவீதிப் புறப்பாடு நடந்தது.எட்டுதிக்கு பூதஆவகானத்திற்குப் பின் பகல் 12.10 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அடுத்து பெருமாள் பள்ளியறை எழுந்தருளினார். இரவில் காப்புக்கட்டி பெருமாள் தேவியருடன் பல்லக்கில் திருவீதி வலம் வந்தனர். மே 3ல் தேரோட்டம், மே 4ல் தீர்த்தவாரி,மே 5ல் புஷ்ப பல்லக்கு நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !