மணவெளி கோவிலில் நாளை செடல் விழா
ADDED :3921 days ago
நெட்டப்பாக்கம்: மணவெளி முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நாளை நடக்கிறது. நல்லாத்துார் மணவெளி கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்நு 26ம் தேதி சாகை வார்த்தல், இரவு 7.00 மணிக்கு கரக வீதியுலா நடந்தது. இன்று மாலை 5.00 மணிக்கு அய்யனார் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நாளை 28ம் தேதி மாலை 4.00 மணிக்கு செடல் உற்சவம், இரவு 8.00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை மணவெளி கிராம மக்கள் செய்துள்ளனர்.