எரிச்சனாம்பாளையத்தில் அம்மன் கோவில் தீமிதி விழா
ADDED :3820 days ago
விழுப்புரம்: எரிச்சனாம்பாளையம் மன்னார் சுவாமி பச்சைவாழியம்மன் கோவிலில், வரும் 1ம் தேதி, தீமிதி திருவிழா நடக்கிறது. விழாவை யொட்டி வரும் 30ம் தேதி இரவு 9:00 மணிக்கு முருகர், வள்ளி தெய்வானை முத்து பல்லக்கு வீதியுலா, பூங்கரகம் நடக்கிறது. தொடர்ந்து 1ம் தேதி பகல் 12:00 மணிக்கு முருகன், வள்ளி தெய்வானை திருக்கல்யாணம், மதியம் 2:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு, மாலை 5:30க்கு தீமிதி திருவிழா நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 2ம் தேதி மாலை 6:00 மணிக்கு நிறைமணி காப்பு களைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.