மூவர் பாடல் பெற்ற திருமுறைத் தலங்கள்!
ADDED :3881 days ago
பொங்கிவரு காவிரி நதிக்குவட பாலில்
பொருந்தும்அறு பத்து மூன்று
புண்ணிய தலங்கள்தென் பாலில்நூற் றிருபதேழ்
பூவிலுயர் பாண்டி நாட்டில்
தங்குபதி ஈரேழு மலைநாட்டில் ஒன்றேழு
தலங்கொங் கில்நடு நாடதில்
சாரும்இரு பானிரண்டு ஈழத் திரண்டுஒன்று
தலமுறும் துளுவம் அதனில்
துங்கமுற எண்ணான்கு நற்கதிகள் ஆகும்உயர்
தொண்டைநா டதனின் வடபால்
தொல்பதிகள் ஐந்திவைகள் மூவர்பா டியதலம்
சொல்லினம் உளவ னந்தம்
திங்களொடு கங்கைபுனை யுஞ்சடை யசைந்திடத்
திருநடம் புரிச ரணனே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.