பஞ்சபூதத் தலங்கள் - சப்தவிடங்கத் தலங்கள்
ADDED :4186 days ago
தலைமையுறு கமலைதிரு நாவலம் பதியருணை
சாற்றுகா ளத்தி நகரம்
சச்சிதா நந்தநட னம்செய்புலி யூர்இவை
தகும்பஞ் சபூ தத்தலம்
நலமருவும் ஐம்பூத நகரொடு சிராமலை
நவின்றகரு வூர்ஆ லவாய்
நண்ணுமிவை அட்டமூர்த் திப்பதிகள் வாஞ்சியம்
நலங்கொள் ஐயா றர்ச்சுனம்
குலவுதிரு வெண்காடு கவுரிமா யூரங்
குளிர்ந்தசா யாவ னம்எனக்
கூறுபதி சட்காசி திருநாகை நள்ளாறு
கோளிலிசொன் மறைவ னம்பூத்
திலகுகம லாலயங் காறாயில் வான்மியூர்
செப்பிலிவை யேழ்வி டங்கம்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.