உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆறு ஆதாரத் தலங்கள் - எட்டு வீரட்டத் தலங்கள்

ஆறு ஆதாரத் தலங்கள் - எட்டு வீரட்டத் தலங்கள்

மூலம்ஆ ரூர்சுவா திட்டான நிலைநாவன்
மொழியுமணி பூரம் அருணை
முக்கியஅ நாகதம் தில்லைநகர் காளத்தி
முனிவர்சொல் விசுத்தி காசி
சீலமிகும் ஆக்கினைப் பதிதிருக் கயிலைமலை
சேர்பிரம ரந்திர மதாம்
சிவமருவு திருமதுரை துவாதசாந் தத்தலம்
செப்பியவி ராட்புரு டனுக்(கு)
ஏலும்இவை ஆதார நிலையதாம் கண்டியூர்
எழில்அதிகை அணிகொ றுக்கை
எய்தும்விற் குடிகோவல் பறியல்வழு வூர்சினத்(து)
இயமனைக் காய்ந்த கடவூர்
சேலிலகு கண்ணியுடன் இப்பதியுன் வீரட்ட
சிவமாகி நீயு றைந்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !