உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்த மாரியம்மனுக்கு சித்ரா பவுர்ணமி பூஜை!

ஆனந்த மாரியம்மனுக்கு சித்ரா பவுர்ணமி பூஜை!

கடலூர்: கடலூர், திருப்பாதிரிப்புலியூர் ஆனந்த மாரியம்மனுக்கு 24ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி பூஜை வரும் 3ம் தேதி நடக்கிறது. கடலூர், திருப் பாதிரிப்புலியூர் அமர்ந்தவாழி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஆனந்த மாரியம்மனுக்கு 24ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி பூஜை வரும் 3ம் தேதி   நடக்கிறது. அதனையொட்டி அன்று மாலை 3:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 12:00   மணிக்கு மகா தீபாரதனை நடக்கிறது. . அதனை தொடர்ந்து சாகை வார்த்தல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !