சீர்காழி கோதண்டராம சுவாமி கோயில் மஹா சம்ப்ரோக்ஷணம் திரளான பக்தர்கள் தரிசனம்!
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழி, தொன்பாதியில் புகழ் பெற்ற ஸ்ரீ சீதா, லக்ஷூமண, பரத, சத்ருக்ண, ஹனும த் சகித ஸ்ரீ கோதண்டராம சுவாதி கோயில் உள்ளது. இக்கோயிலின் திருப் பணிகள் முடிவடைந்த நிலை யில் நேற்று மஹா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. மஹா சம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு கடந்த 28ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 7.30 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து மஹா பூர்ணாஹூதி யாத்ராதானம் நடைபெற்றது.8 மணிக்கு கடங்கள் புறப்பட்டு கோயி லை வலம் வந்து ஸ்ரீ கோதண்டராமர் சன்னதி உள்ளிட்ட விமானங்களை வந்தடைந்தது.தொடர்ந்து 8.30 மணிக்கு பட்டாச்சாரியார்கள் விமானகலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மஹா சம்ப்ரோக்ஷணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து பெருமாள், தாயாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சம்ப்ரோக்ஷணம், யாக சாலை பூஜைகளை சர் வசாதகம் அண்ணன்கோயில் மாதவ பட்டாச்சாரியார் தலைமையிலானோர் நடத்தி வைத்தனர். விழா ஏ ற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் நாராயணன்,ராமானுஜ அய்யங்கார் குமாரர்கள்,ஸ்தலத்தார் மற்று ம் கோதண்டராம பக்த ஜனசபாவினர் செயிதிருந்தனர். சம்ரோக்ஷணம் முடிந்து பக்தர்கள் அனைவருக் கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சீர்காழி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.