கிருஷ்ணன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!
ADDED :3812 days ago
புதுச்சேரி: ஆனந்தரங்கப்பிள்ளைத்தோட்டம் நவநீத கிருஷ்ணன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. புதுச்சேரி ஆனந்தரங்கப்பிள்ளைத்தோட்டத்தில் நவநீத கிருஷ்ணன் கோவிலில் சித்திரை பிரமோற்சவம் கடந்த 21ம் தேதி துவங்கியது. தினம், காலையில் ஹோமங்களும், மாலையில் திருச்சிவிதை, சூரியபிரம்பை, சேஷவாகனம், கருடைசேவை, அனுமந்த வாகனளில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று மாலை 6 மணிக்கு பூமி, சீனிவாசப் பெருமாள், பூவராகர், சீதாராமபிரான், கோதா சமே கிருஷ்ணனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.