தேர்களுக்கு பந்த கால் முகூர்த்தம்!
ADDED :3812 days ago
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரம்மோற்ச விழாவையொட்டி தேர்களுக்கு பந்தகால் முகூர்த்தம் நடந்தது.
இதையொட்டி கடந்த 17ம் பந்தகால் முகூர்த்தம் நடத்தது. முக்கிய நிகழ்ச்சியாக வரும் ௨9ம் தேதி தேரோட்டம், 30ம்தேதி சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவில் கடந்த ஆண்டு 2 தேரோட்டம் நடந்தது. இந்தாண்டு கூடுதலாக 3 தேர் புதிதாக செய்யப்பட்டு கடந்த 2ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது. பிரமோற்ச விழாவையொட்டி 5 தேர்களுக்கு பந்ததகால் முகூர்த்தம் நடந்தது. நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், கட்டளை விசாரனை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.