பக்தர்கள் வெள்ளத்தில்.. பச்சை பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!
ADDED :3810 days ago
மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி காலை 6.47 மணியளவில் நடைபெற்றது.
அழகர் பச்சை பட்டு உடுத்தி, ஆண்டாள் சூடிய பரிவட்டம் மாலை ஆகியவற்றுடன் பக்தர்கள் வெள்ளத்தில், ஜொலித்த தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இழங்கினார். அழகர் வைகை ஆற்றில் இறங்கியதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். விழாவை முன்னிட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் தண்ணீரை பீச்சியடித்து சாமி தரிசனம் செய்தனர். நாளை ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.