திருக்கோஷ்டியூரில் சித்திரைத் தேரோட்டம்!
ADDED :3868 days ago
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் சித்திரைப் பிரமோற்சவத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. பிரமோற்சவம் கடந்த ஏப்.,24ல் காப்புக்கட்டி துவங்கியது. தினமும் இரவில் பெருமாள் தேவியருடன் பல்லக்கில் திருவீதி வலம் வந்தார். நேற்று முன்தினம் அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.நேற்று காலை 8.40 மணிக்கு பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவியருடன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் அர்ச்சனை செய்து வழி பட்டனர். மாலையில் 4.25 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. தேர் நிலைக்கு வந்த பின்னர் பெருமாள் கோயில் 10ம் திருநாள் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அபிஷேக ஆராதனை களுடன் தீர்த்தவாரி நடந்தது. நாளை இரவு புஷ்ப பல்லக்கு நடைபெறும். ஏற்பாட்டினை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தினர் செய்தனர்.