உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி முருகன் கோவிலில் பவுர்ணமி காவடி உற்சவம்!

சக்தி முருகன் கோவிலில் பவுர்ணமி காவடி உற்சவம்!

புதுச்சத்திரம்: வாண்டையாம்பள்ளம் சக்தி முருகன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு காவடி உற்சவம் நடந்தது. உற்சவத்தையொட்டி,  கடந்த  29ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதுலுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் அபிஷேக ஆராதனை நடந்தது. சிறப்பு விழாவான  காவடி உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி காலை 7:00 மணிக்கு சக்தி முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், 10:00  மணிக்கு காவடி உற்சவமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் காவடி மற்றும் தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பங்கேற்ற அனைவரு க்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோன்று  புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு பாலமுருகன் கோவிலில் 19வது ஆண்டு செடல் உற்சவம்  நடந்தது.  கடந்த  22ம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி வீதியுலா நடந்தது.  காவடி மற்றும் செடல் உற்சவம் நேற்று  முன்தினம் நடந்தது.  அதனையொட்டி காலை 6.00 மணிக்கு பெரியப்பட்டு குட்டியாண்டவர் குளத்திலிருந்து காவடிகள் அலங்கரிக்கப்பட்டு காலை  10:00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !