முத்து வடுகநாத சுவாமி கோயில் சித்ரா பவுர்ணமி பால்குடவிழா
ADDED :3808 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுகநாதர் கோயில் சித்ரா பவுர்ணமி பால்குடவிழா நடந்தது.நேற்று காலை சீரணி அரங்கு ஐயப்பன் கோயிலிலிருந்து பக்தர்கள் பால்குடமெடுத்து கோயிலுக்கு வந்தனர். பின்னர் சித்தருக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலை சந்தனக் காப்பு அலங்காரம், சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பெண்கள் ஊர்வலமாக வந்து மாவிளக்கு வழிபாடு செய்தனர். கோயில் முன் கேரள செண்டை மேளம், ஆர்க்கெஸ்ட்ரா, பல்வேறு அமைப்புகள் சார்பில் நகரில் பல இடங்களில் கலை,இசை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு சித்தர் முத்துவடுகநாதசுவாமி திருத்தேர் பவனி நடந்தது. வணிகர் நலச்சங்கத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.