உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவதிகை சரநாராயணபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு

திருவதிகை சரநாராயணபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு

பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை ஹேமாம்புஜவல்லி தாயார் சமேத சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று 1ம் தேதி அமாவாசையை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு விஸ்வரூபம், 7.30 மணிக்கு நித்யபடி பூஜையும் நடந்து மூலவர் தன்வந்திரி பெருமாள் சிறப்பு அலங்காரத்திலும், 9 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், உற்சவர் பெருமாள் உள்புறப்பாடும், 9.30 மணியளவில் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல் 12.30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4 மணிக்கு நடை திறப்பு, 6 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது. பக்தர்களுக்கு மகாபிரசாதமாக பலவகை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மூலிகை பிரசாதம் தினமலர் நாளிதழ் சார்பில் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன், கோவில் தலைமை அர்ச்சகர் ஸ்ரீராமன் பட்டாச்சாரியார் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !