மே 10ல் நடராஜர் அபிஷேகம்!
ADDED :3919 days ago
தேவர்கள் தினமும் ஆறு முறை நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதாக ஐதீகம். அவர்களுக்கு ஒருநாள் என்பது, பூலோகத்தில் ஒரு ஆண்டுக்குச் சமமானது. இதன் அடிப்படையில், சிவன் கோயில்களில் ஆண்டுக்கு ஆறுமுறை நடராஜர் அபிஷேகம் நடக்கிறது. மார்கழி திருவாதிரையன்று அதிகாலையிலும், மாசி வளர்பிறை சதுர்த்தசி திதியன்று காலையிலும், சித்திரை திருவோணத்தன்று உச்சிக் காலத்திலும், ஆனி உத்திரத்தன்று மாலையிலும், ஆவணி வளர்பிறை சதுர்த்தசியில் இரவிலும், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியன்றுஅர்த்தஜாம பூஜையின் போதும் அபிஷேகம் நடை பெறும். இதில் சித்திரை திருவோண அபிஷேகம் வரும் மே 10, மதியம் திருவாலங்காடு, சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் உள்ளிட்ட பஞ்ச சபைகளிலும், சிவாலயங்களில் உள்ள நடராஜர் சந்நிதியில் சிறப்பாக நடக்கும்.