உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூத்தாண்டவர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது!

கூத்தாண்டவர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது!

திருவெண்ணெய்நல்லூர்: கூவாகம் கோவிலில் நடந்த சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நேற்று மாலை சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான திருநங்கைகள் பூசாரிகளின்  கையால் தாலிக்கட்டிக்கொண்டு இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக நேற்று மாலை முதலே பக்தர்கள் மற்றும்  திருநங்கைகள் ஆயிரக்கணக்கில் குவியத் துவங்கினர். கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கடைகளில் மாங்கல்யத்தை(தாலிக்கயிறு) திருந ங்கைகள் பக்தியுடன் வாங்கிச் சென்று, சுவாமியை வணங்கி அணிந்து கொண்டனர். சுவாமி தரிசனம் முடித்து வெளியில் வந்த பின்,  கேளிக்கை  பொருட்கள், வளையல்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆர்வமுடன் வாங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !