உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாப்பூரில் சின்ன கபாலிக்கு உற்சவம்!

மயிலாப்பூரில் சின்ன கபாலிக்கு உற்சவம்!

மயிலாப்பூர்: சென்னை, மயிலாப்பூரில், சின்ன கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரருக்கு, சித்திரை திருவிழா துவங்கி நடந்து வருகிறது. சித்திரை திருவாதிரை நாளில் நடைபெறும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, மயிலாப்பூரில், சின்ன கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரருக்கு நேற்று முன்தினம் கொடியேற்றம் நடந்தது. இந்த விழா, முழுக்க முழுக்க, சிறுவர்களால் நடத்தப்படுகிறது. 15க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கூடி, வேதம் ஓதி, மந்திரங்கள் முழங்கியபடி, இரண்டு வேளை பூஜை செய்து, சின்ன கபாலீஸ்வரருக்கு, தினசரி வெவ்வேறு அலங்காரங்கள் செய்வித்து, வீதியுலா நடத்தி வருகின்றனர். நேற்று இரவு, புன்னை மர வாகனத்தில், சுவாமி எழுந்தருளினார். இன்று காலை 7:00 மணிக்கு அதிகார நந்தி வாகனம், வரும், ௮ம் தேதி இரவு ரிஷப வாகனம், வரும், 10ம் தேதி காலை 8:00 மணிக்கு தேரோட்டம், வரும், 13ம் தேதி இரவு 8:15 மணிக்கு திருக்கல்யாணம் ஆகியவை நடக்க உள்ளன. இந்த உற்சவ நிகழ்ச்சி வரும் 14ம் தேதி வரை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !