சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா
ADDED :3810 days ago
பந்தலுார் : பந்தலுார் அருகே உப்பட்டி சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில், கத்திபோட்ட நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. பந்தலுார் உப்பட்டி ஹட்டியில், ராமலிங்கசவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா, கடந்த, 3ம்தேதி, கணபதி ஓமத்துடன் துவங்கியது. 4ம் தேதி நடந்த முக்கிய திருவிழாவில், கங்கை பூஜையின்போது பக்தர்கள் கத்திபோட்ட நிகழ்ச்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ராஜூ தலைமையிலான கமிட்டியினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.