ஆதனூர் கோவிலில் சுவாமி வீதியுலா உற்சவம்
ADDED :3810 days ago
உளுந்தூர்பேட்டை: ஆதனூர் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் சுவாமி கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.உளுந்தூர்பேட்டை தாலுகா ஆதனூர் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் சுவாமி கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தொகுதி எம்.எல்.ஏ., குமரகுரு கோரிக்கையின்படி, கோவிலை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. கோவில் பராமரிப்பு பணிகள் நடந்து வரும் அதே வேலையில், பிரதோஷம் மற்றும் முக்கிய நாட்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்க துவங்கியுள்ளது. சித்ரா பவுர்ணமியையொட்டி சுவாமியை வீதியுலா உற்சவம் நடந்தது.