உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் குவியும் கேரள பக்தர்கள்: நேர்த்திக்கடன் செலுத்த ஆர்வம்!

பழநியில் குவியும் கேரள பக்தர்கள்: நேர்த்திக்கடன் செலுத்த ஆர்வம்!

பழநி: கோடை விடுமுறையை முன்னிட்டு பழநி கோயிலுக்கு கேரள பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் கேரளா, கர்நாடக, ஆந்திரா மாநில பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளாவில் இருந்து வரும் பக்தர்கள் அலகு குத்தியும், காவடிகள் எடுத்தும், முடிகாணிக்கை செலுத்தியும் பழநி மலைக்கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். இதைபோல விடுமுறை தினத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்க ரதம் இழுக்கின்றனர். அதிகபட்சமாக மே 1ல் 280 பேர் தங்கரதம் இழுத்தனர். கேரளா, திருச்சூரை சேர்ந்த பக்தர்கள் 6 அடி உயரத்தில் மயில்தோகை அலங்காரத்துடன் கோபுரக்காவடி எடுத்து ஆட்டம் பாட்டத்துடன் நேர்த்திகடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !