புத்து மாரியம்மன் கோவிலில் தீ மிதித்து நேர்த்திக்கடன்
ADDED :3808 days ago
ஆத்தூர் : ஆத்தூர் அருகே, மஞ்சினி கிராமத்தில் புத்து மாரியம்மன் கோவிலில், சித்திரை மாத திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர்.மாலை 6.30 மணியளவில், அக்னி குண்டத்தில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.