உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளர் கோலத்தில் பூ பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

கள்ளர் கோலத்தில் பூ பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

மதுரை: மதுரையில் கள்ளர் கோலத்தில் பூ பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளினார். மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் உற்சவம் கடந்த மே.4ல் நடந்தது. தொடர்ந்து, விழாவில் தேனூர் மண்டபம், ராமராயர் மண்டபத்தில் பல்வேறு வைபவங்களில் கள்ளழகர் பங்கேற்றார். மே.7ல் அதிகாலை ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளிய அழகர், கள்ளர் திருக்கோலத்தில் பூ பல்லக்கில் காட்சியளித்தார். கோவிந்தா கோஷம் முழங்க அவுட் போஸ்ட் மாரியம்மன் கோயிலுக்கு புறப்பட்ட அழகரை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !