வழுக்கம்பாறை சகாய அன்னை ஆலய திருவிழா
ADDED :3806 days ago
நாகர்கோவில் : நாகர்கோவில் அஞ்சுகிராமம் தேசிய நெடுஞ்சாலையில் வழுக்கம்பாறை இடைவிடாத சகாயஅன்னை ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு திருவிழா 8-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. அன்று மாலை ஆறு மணிக்கு மறை மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் போர்ஜியோ தலைமையில் கொடியேற்று விழா நடக்கிறது. தொடர்ந்து விழாவில் தினமும் ஜெபமாலை, மறையுரை, திருப்பலி, அன்பிய ஆண்டு விழா போட்டிகள், ஆண்டு விழா கூட்டம் ஆகியவை நடக்கிறது. 17-ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு முதல் திருப்பலியும், காலை ஏழு மணிக்கு ஆயர் பீட்டர் ரெம்ஜியூஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும் நடக்கிறது. மாலை ஆறு மணிக்கு திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.