பூண்டி மாதா பேராலய திருவிழா துவக்கம்
ADDED :3806 days ago
தஞ்சாவூர்: பூண்டி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள முக்கிய கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான பூண்டி மாதா பேராலய திருவிழா, நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. 15ம் தேதி முடிய விழா தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் திருப்பலி, மறையுரை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 14ம் தேதி இரவு அலங்கார தேர் பவனி நடக்கிறது. 15ம் தேதி காலை, 6மணிக்கு ஆயர் அந்தோணிசாமி தலைமையில், திருவிழா கூட்டுதிருப்பலி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, பூண்டி மாதா பேராலய பங்கு மக்கள், விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.