உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 105 வயது தாத்தாவுடன் உறவினர்கள் சிறப்பு பூஜை

105 வயது தாத்தாவுடன் உறவினர்கள் சிறப்பு பூஜை

பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் 105 வயதான தாத்தா நீடுழிவாழ, உறவினர்கள் சிறப்பு பூஜைசெய்து ஆசிபெற்றனர். திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியம் பாறைப்பட்டியை சேர்ந்தவர் மளிகை கடை வியாபாரி சுப்பையன் செட்டியார்,105. இவரது மனைவி பழனியம்மாள், 90. இவர்களுக்கு 4 மகள்கள், 16 பேரன், பேத்திகள் மற்றும் அவர்கள் வழியில் கொள்ளு பேத்தி, பேரன் என 50க்கு மேற்பட்டோர் உள்ளனர். சில நாட்களாக சுப்பையன் செட்டியார் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், மூன்று தலைமுறை கண்ட "தாத்தா பூரண ஆரோக்யத்துடன், தங்களுடன் நீடூழி வாழவேண்டும் என, அவரது உறவினர்கள் வேண்டினர். அப்பெரியவருடன் அனைவரும் பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், கைலாசநாதருக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். அந்த தம்பதியினரிடம் உறவினர்கள் ஆசிபெற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. சுப்பையன் செட்டியாருடைய மருமகன் ராஜமாணிக்கம் கூறுகையில், ""இன்று நூறு வயதை கடந்த சிலரே உள்ளனர். எனது மாமா பிறந்த ஆண்டு விவரம் தெரியாது. கொள்ளுபேத்தி, பேரன்களுக்கு திருமணமாகிவிட்டது. அவரால் எழுந்து நடக்கமுடியாது. சைகையுடன் சத்தமாக பேசினால் புரிந்து கொள்வார்,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !