ஆலயத்திற்குரிய அங்கமும் லிங்கமும்!
ADDED :3839 days ago
மேவுகெர்ப் பக்கிரகம் முடியர்த்த மண்டபம்
விதித்தமார் பீடம தாகும்
வியன்நாபி யேதபன மண்டபம் நடம்புரியும்
மிக்கமண் டபமு ழந்தாள்
தாவிலாத் தானமே மேவுநற் சங்கமாந்
தாள்மகா கோபு ரமெனச்
சாற்றினை யிலிங்கவடி வேழ்கோபு ரம்பீட
தலமு டன்பிர காரநல்
தூபியோ டருச்சகன் மூலவிங் கத்தோடு
துவாரம்எம் கோயில் உயிரே
சுடரிலிங் கஞ்சிவக் குறியுட்ப ராத்தும
சொரூபவெளி யாகி நின்றாய்
தேவருணர் வரியவச் சிவமாய் நடஞ்செயும்
சின்மயா னந்த வாழ்வே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.