பழநி மகாலட்சுமிக்கு 108 சங்காபிஷேகம்!
ADDED :3807 days ago
பழநி: பழநி லட்சுமிபுரம் மகாலட்சுமி கோயிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு 20ம் ஆண்டு விழாவைமுன்னிட்டு 108 சங்குகள் வைத்து சிறப்பு ய õகபூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு பழநி சண்முகபுரம் இலக்கிய மன்றம் சித்திவிநாயகர்கோயிலிருந்து பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம் எடுத்துவந்து மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடந்தது. பகல் 11.30 மணிக்கு கும்பகலசங்கள் 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி வைத்து சிறப்பு யாகபூஜை நடந்தது. அதன்பின் மகாலட்சுமிக்கு 108 சங்காபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.