வீரட்டானேஸ்வரர் கோவிலில் அப்பர் சுவாமி நீர்மோர் உற்சவம்!
ADDED :3863 days ago
பண்ருட்டி: திருவதிகை பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் அப்பர் சுவாமி நீர்மோர் உற்சவம் நடந்தது. பண்ருட்டி அடுத்த திரு வதிகை பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் அப்பர் சுவாமிகளுக்கு சதய உற்சவம் கடந்த 3ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி அன்று அப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 6ம் தேதி தெப்பல் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் (7ம் தேதி) அப்பர் சுவாமிகளுக்கு நீர்மோர் உற்சவம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.