உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் கள்ளழகர் கோயிலுக்கு திரும்பினார்!

பரமக்குடியில் கள்ளழகர் கோயிலுக்கு திரும்பினார்!

பரமக்குடி: பரமக்குடியில் நேற்று பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன், பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, கோயிலுக்கு திரும்பினார்.  கடந்த மே 4 ல் அதிகாலை 3.30 மணிக்கு, பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர், மறுநாள் காலை 9 மணிக்கு குதிரை வாகனத்தில் அ  ருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சியடித்து அழகரை வரவேற்றார். தொடர்ந்து சேஷ, கருட வாகனத்தில் அருள்பாலித்த   கள்ளழகரின் தசாவதார சேவை விடிய, விடிய நடந்தது.  நேற்று காலை 8 மணிக்கு வைகையில் இருந்து பூப்பல்லக்கில் புறப்பட்ட பெருமாள்,   கள்ளழகர் திருக் கோலத்துடன், நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்தார். மேள, தாளத்துடன், வாணவேடிக்கைகளுடன் அனைத்து வீடுகளிலும் பூ  ஜைகள் நடத்தப்பட்டது. மாலை 6 மணிக்கு கோயில் வாசலை அடைந்து, கருப்பண்ண சாமியிடம் விடை பெற்றுச் சென்ற அழகர், சிறப்பு   தீபாராதனைகளுடன் கோயிலுக்கு திரும்பினார்.  இரவு கண்ணாடி சேவை நடந்தது. இன்று பகல் உற்சவசாந்தி வைபவமும், நாளை காலை பாலாபி  ஷேகம், இரவில் பூப்பல்லக்கில் வீதியுலாவுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !