உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூண்டி கோவிலில் பாலாலய பூஜை!

பூண்டி கோவிலில் பாலாலய பூஜை!

அவிநாசி : பூண்டி கோவில் கும்பாபிஷேகம், வரும், 29ல் நடைபெற உள்ளது; நேற்று பாலாலய பூஜைகள் நடத்தப்பட்டன.

திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், வரும், 29ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழா, 22ல் கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. ஆறு கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன.மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில், பூண்டி கோவில் உள்ளதால், சிறிய அளவிலான திருப்பணி மற்றும் மராமத்து பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதை துவக்க வசதியாக, அனைத்து சன்னதிகள் முன் ஹோமங்கள் மற்றும் பாலாலய பூஜைகள், நேற்று நடைபெற்றன.தொடர்ந்து, அனைத்து மூர்த்திகளும் கண்ணாடியில் எழுந்தருளச் செய்து, வெளிப்பிரகாரத்தில் வாகன மண்டபத்தில் வைக்கப்பட்டன. செயல் அலுவலர் சரவணபவன், உள்ளாட்சி பிரதிநிதிகள், திருமுருகநாத சுவாமி அறக்கட்டளை, ஸ்ரீசுந்தரர் வழிபாட்டுக்குழு, பிரதோஷ வழிபாட்டுக்குழு, ஸ்ரீருத்ராபிஷேக வழிபாட்டுக்குழு

நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.அதன்பின், கோபுரங்களுக்கு வர்ணம் பூசுதல், மராமத்து பணி மேற்கொள்ள பூஜை நடத்தப்பட்டது. சேக்கிழார் புனிதர் பேரவை சார்பில், உழவாரப் பணி நடந்தது. அதன் தலைவர் முத்து நடராஜன், பணியை துவக்கி வைத்தார்.கோவில் உள்பிரகாரம் மற்றும் வெளி பிரகாரகம், சன்னதிகள், தரைத்தளங்கள் என கோவிலின் அனைத்து இடங்களும், தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டது. அதேபோல், 63 நாயன்மார் சன்னதி, மடப்பள்ளி, அம்மன் சன்னதி முன் மண்டபம் ஆகியனவும் சுத்தம் செய்யப்பட்டன. குத்துவிளக்கு, பிரபாவளையங்கள், பூஜை பொருட்கள், நாகாபரணம், விநாயகர் கவசம் ஆகியனவற்றை, பக்தர் பேரவை பெண்கள் சுத்தம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !