கன்னியாகுமரியில் திருக்கல்யாண விழா!
ADDED :3803 days ago
நாகர்கோவில் : கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பில் உள்ள ஸ்ரீகுநாதீஸ்வரர் கோயிலில் வருஷாபிஷேக விழா மற்றும் ஸ்ரீகுநாததீஸ்வரர்- ஸ்ரீபார்வதி அம்பாள் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பெண் அழைப்பு நடைபெற்றது. பின்னர் ஆறு மணியில் இருந்து 7.30 மணி வரை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.