கொணமங்கலம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
ADDED :3800 days ago
மயிலம்: கொணமங்கலம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா துவங்கியது. கொணமங்கலத்திலுள்ள மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. காலை 9:00 மணிக்கு காப்பு கட்டுதல் நடந்தது. கிராம குளக்கரையிலிருந்து பக்தர்கள் பூங்கரகத்தை முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர். இரவு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. தினசரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, மகா தீபாரதனைகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.