தெப்பத்தில் வலம் வந்த கரிகிருஷ்ண பெருமாள்!
ADDED :3963 days ago
பொன்னேரி: கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில், தெப்ப திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. பொன்னேரி, திருவாயற்பாடி, கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில், கடந்த 2ம் தேதி, கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. தொடர்ந்து, கருடோற்சவம், தேர் திருவிழா ஆகியவை சிறப்பாக நடந்தன. நேற்று முன்தினம் இரவு, தெப்போற்சவம் நடந்தது. கோவிலின் பின்புறம் உள்ள, சந்தானபுஷ்கரணி திருக்குளத்தில், தெப்ப திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. அலங் கரிக்கப்பட்ட தெப்பத்தில், கரிகிருஷ்ண பெருமாள் வீற்றிருந்தார்.திருக்குளத்தினை மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருக்குளத்தினை சுற்றிலும் கூடியிருந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள், பெருமாளை வழிபட்டனர்.