விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி!
ADDED :3846 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பழமலைநாதர் உழவார தொண்டர் திருக்கூட்டம் சார்பில் உழவாரப் பணி நடந்தது. இதையொட்டி, கோவில் வெளி பிரகாரம், உள் பிரகாரம், நூற்றுக்கால் மண்டபம், ராஜகோபுர முகப்பு, சுவாமி மற்றும் தாயார் சன்னதிகளில் துõசு, குப்பைகள், முட்செடிகளை உழவாரத் தொண்டர்கள் வெட்டி, அப்புறப்படுத்தினர்.