கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா: வீதியுலா!
ADDED :3799 days ago
ஆர்.கே.பேட்டை: கோணசமுத்திரம் கிராமத்தில், கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா, நேற்று நடந்தது. சாமுண்டீஸ்வரியம்மன் கோவிலில் இருந்து, கங்கையம்மன் வீதியுலா எழுந்தருளினார். பொதட்டூர்பேட்டை அடுத்த, கோணசமுத்திரம் கிராமத்தில், கங்கையம்மன் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று முன்தினம், காலை 10:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் அம்மனுக்கு திரளான பெண்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை 6:00 மணிக்கு, கொத்தகுப்பம் சாமுண்டீஸ்வரி கோவிலில் இருந்து, கங்கையம்மன் வீதியுலா எழுந்தருளினார். இரவு 8:00 மணிக்கு, அம்மனுக்கு கும்பம் படைக்கப் பட்டது. நேற்று காலை, அம்மனுக்கு பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலை 6:00 மணிக்கு, மாவிளக்கு ஏற்றி, பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.