உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரத்தில் உலக சித்தர்கள் தின விழா!

சிதம்பரத்தில் உலக சித்தர்கள் தின விழா!

சிதம்பரம்: மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்கம் சார்பில் உலக சித்தர்கள் தின விழா கருத்தரங்கு சிதம்பரத்தில் நடந்தது. மாவட்ட கவுரவத் தலைவர் தனபால் தலைமை தாங்கினார். செயலர் கருணாமூர்த்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராகவன், ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் சின்னசாமி எழுதிய உடல் எடையைக் குறைக்க சித்த மருத்துவம் என்ற மருத்துவ நூலை வெளியிட்டார். இதனை மாவட்ட கவுரவத் தலைவர் தனபால் பெற்றுக்கொண்டார். விழாவில், சித்தர்கள் பற்றியும், சித்த மருத்துவம், அதன் சிறப்புகள் குறித்து புலவர் பொய்யாமொழி, கடலுõர் ரூமி ராஜசேகரன், வர்மக்கலை ஆசான் காந்தி, மகாலிங்கம், சஞ்சீவி, திருநீலகண்டன், முருகனார், தர்மலிங்கம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். விழாவில் ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் சின்னசாமி, மாவட்டச் செயலர் கருணாமூர்த்தி, மூலிகை வைத்தியர்கள் மணலுõர் ரவி, பாண்டியன், சிவக்குமார், தில்லைவிடங்கன் சிவபூஷணம், யோகா சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !