உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தன மாரியம்மன் கோவில் திருவிழா

சந்தன மாரியம்மன் கோவில் திருவிழா

வால்பாறை: வால்பாறை சந்தனமாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வால்பாறை வாழைத்தோட்டம் ராஜிவ் நகர் சந்தனமாரியம்மன் கோவிலின் 8ம் ஆண்டு திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை வால்பாறை இன்ஸ்பெக்டர் ஜெயராமன், கல்லூரி முதல்வர் பழனிச்சாமி உட்பட பலர் ஏற்றினர். விழாவில் நாளை (15ம் தேதி) இரவு, 7:00 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து சக்தி கும்பம் கொண்டுவரப்பட்டு, அபி?ஷக பூஜை நடக்கிறது. வரும் 16ம் தேதி, காலை, 8:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோவிலிருந்து அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டு, காலை, 11:30 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !