பிரதிட்டை செய்த திருவுருவைத் தரிசிக்கும் வகைகள்!
ADDED :3834 days ago
முந்தவுயர் தெரிசனம் கன்றினொ டிணங்குமான்
மொழியி ரண்டிற் கன்னிகை
மூன்றினில் பாலினொடு கவ்வியம் புகல்நான்கின்
முறைசொல்நவ தானி யந்தான்
ஐந்தினிற் சகலதா னியமாடி யாறின்ஏழ்
அதுதனில் சன்னி யாசி
அருமறையின் ஒலியெட்டின் ஒன்பதிற் சிவபத்தர்
ஐயிரண் டியமா னன்முன்
தந்திடு மகாசனம் யாவரும் இலிங்காதி
தாபனம் செய்த கால
தரிசனம் செய்யமுறை யென்றுநிக மாகமம்
சாற்றினைகொல் உலகம் உய்யச்
சிந்துர முகன்குகனும் வந்துபணி தந்தையாம்
தெய்வமே பரம குருவே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.