பூசைக்கால தரிசன பலன்!
ADDED :4170 days ago
சங்கர சதாசிவ பராபர உனைக்காலை
சந்தியில் தொழுத வர்க்குச்
சகலபிணி களுமொழியும் மத்தியா னத்தில்
தனம்பெருகும் அந்தி யமையத்(து)
அங்கணவுன் அடியிணையை வந்தனைசெய் அடியவர்க்கு
அளவில்பா தகமொ ழிக்கும்
அர்த்தசா மத்திலுறு முத்தியென நான்மறையொடு
அளவில்ஆ கமம்உ ரைத்தாய்
பொங்கும்அடி யவர்திருச் சிற்றம்ப லத்தினொரு
பொழுதேனுந் தொழநி னைவுறப்
பொதுநடங் கண்டுதுதி செய்திடத் தாலுவாற்
புகலவொரு விசையெ ளிதினில்
திங்களினன் உளவளவும் அழியாத நற்பெருஞ்
சீரொடுபின் முத்தி யருள்வாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.