செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!
தியாகதுருகம்: பல்லகச்சேரி கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தியாகதுருகம் அடுத்த பல்லகச்சேரி கிராமத்தில் நுõற்றாண்டு பழமையான செல்லியம்மன் கோவில், திருப்பணிகள் முடிந்து கடந்த 12 ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கி யது. ராமநாத சிவாச்சாரியார் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்தது. ராஜன்பாபு செட்டியார் தலைமையில் கும்பாபிஷேக விழா நடந்தது. அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அய்யப்பா, ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு அருணாச்சலம், ஊர் நாட்டாமைதாரர்கள் முன்னிலை வகித்தனர். எலவனாசூர்கோட்டை வெங்கட்ராம்ஜி கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பா பிஷேகத்தை நடத்தி வைத்தார். அதைத் தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் சுற்று வட்டார கிராம ங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.