வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!
ADDED :3844 days ago
சபரிமலை: வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை தற்போது திறந்துள்ளது. நேற்று அதிகாலை நடை திறந்து நெய்யபிஷேகம் ஆரம்பித்தது. இது வரும் 19ம் தேதி பகல் 12 மணி வரை நடைபெறும். எல்லா நாட்களிலும் இரவு ஏழு மணிக்கு படிபூஜை நடைபெறுகிறது. மதியம் சகஸ்ரகலச பூஜையும், களப பூஜையும் நடைபெறுகிறது. சபரிமலை நடை வரும் 19ம் தேதி இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.